அட கடவுளே… 157 பள்ளிகளில் ஒருத்தர் கூட பாஸ் பண்ணல… அதிர வைக்கும் 10ஆம் வகுப்பு ரிசல்ட்!

குஜராத் மாநில 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

குஜராத்குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் வெறும் 64.62 சதவீத மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.​ இன்றுடன் விடை பெறுகிறது அக்னி நட்சத்திரம்… ஆனாலும் தப்பிக்க முடியாதாம்!​
10 ஆம் வகுப்பு ரிசல்ட்இதன் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. அதன்படி 272 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. அதே நேரம் 1084 பள்ளிக் கூடங்கள் வெறும் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே கொடுத்துள்ளன. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 157 பள்ளிகள் 0 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளன. அதாவது அந்த பள்ளிக் கூடங்களில் இருந்து ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.​ தமிழகத்திற்கே பெரும் தலைகுனிவு… திமுக அரசை சரமாரியாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!​ஒருத்தர் கூட பாஸ் பண்ணலபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை கேட்டு அதிர்ந்து போயுள்ள பெற்றோருக்கு 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் பேரிடியாக உள்ளது. இதில் சூரத் மாவட்டம் 76.45 சதவீத தேர்ச்சி முடிவுகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. டாகோட் மாவட்டம் வெறும் 40 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
​Trisha: 40 வயது பேரழகி… புடவையில் தெறிக்கவிட்ட த்ரிஷாவின் கலக்கல் போட்டோஸ்!​மாணவிகள் அதிகம்தமிழகத்தை போலவே குஜராத்திலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி 70.62 சதவீத மாணவிகளும், 59.58 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில மொழி பாடமான குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதேபோல் கணித பாடத்தில் 1,96,000 மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.
​திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!​பெரும் அதிர்ச்சிகுஜராத் மாநில முதல்வராக 2001 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 4 முறை இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்த மாநிலம் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என அனைத்திலும் முன்னோடி மாநிலம் என்றும் இந்தியாவின் மாடல் மாநிலம் என்ற பிம்பத்தையும் உருவாக்கியிருந்தார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.​காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.