“உண்மையான கதை என்று டைட்டிலில் மட்டும் இருக்கக்கூடாது"- 'தி கேரளா ஸ்டோரி’ குறித்து கமல்ஹாசன்

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியானது முதல் திரையரங்குகளில் படம் வெளியானது வரை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி இருந்தது.

இப்படத்தை கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட அரசுகளும் எதிர்த்திருந்தன.  எதிராகவும், ஆதரவாகவும் பல பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வந்தனர். அந்தவகையில் நடிகர் கமல்ஹாசனும் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த தனதுக் கருத்தினை தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன், சுதிப்தோ சென்

அபுதாபியில் நடைபெற்ற IFFA 2023 எனும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த   கமல்ஹாசனிடம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அவர், “முன்பே கூறியது போல பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். உண்மைக் கதை என்று டைட்டில் கார்டில் எழுதினால் மட்டும் போதாது. அது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் ‘தி கேரளா ஸ்டோரி’ உண்மையானக் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல” என்று விமர்சித்திருந்தார். 

இந்நிலையில்  ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கமல்ஹாசன் கருத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், “ இதற்கு முன் படத்தைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு  நான் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் விளக்கமளிக்கவே முயற்சி செய்தேன். ஏனென்றால் முதலில் பிரச்சாரப் படம் என்று கூறியவர்கள் படத்தைப் பார்த்த பிறகு படம் நன்றாக உள்ளது என்று கூறினார்கள்.

சுதிப்தோ சென்

அதேபோல் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் படம் வெளியாகவில்லை. படத்தை பார்க்காமலேயே சிலர் இது பிரச்சார படம் என நினைக்கிறார்கள். நம் நாட்டில் அனைவருமே ஒரே மாதிரியான முட்டாள்களாக உள்ளனர். படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லாமல், அதை பிரச்சார படம் என்கிறார்கள்” என்று சுதிப்தோ சென் மறைமுகமாக  கமல்ஹாசனை சாடியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.