Girish Chandra Murmu reappointed as World Health Organization auditor | உலக சுகாதார அமைப்பு தணிக்கையாளராக கிரிஷ் சந்திர முர்மு மீண்டும் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய தணிக்கை குழு தலைவரான கிரிஷ் சந்திர முர்மு, உலக சுகாதர அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளரா பணி நீட்டிப்பு செய்யப்பட்டதையடுத்து அப்பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ஜம்மு — காஷ்மீரின், லெப்டினன்ட் கவர்னராக இருந்த கிரீஷ் சந்திர முர்மு, அப்பதவியை ராஜினமா செய்தார். பின்னர் மத்திய தணிக்கை குழு தலைவராக பதவியேற்றார்.

latest tamil news

தொடர்ந்து 2019-ம் உலக சுகாதார அமைப்பின் வெளிப்புற தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு மீண்டும் தேர்வு பெற்றார். இதன் மூலம் இவர் இப்பதவியில் 2027-ம் ஆண்டுவரை இருப்பார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.