அறிவு இருக்கா? ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சர்… மனோ தங்கராஜை திட்டி தீர்த்த பொன் ராதாகிருஷ்ணன்!

கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அப்போது திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, செங்கோலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் செங்கோல் முன்பு சாஷ்டங்கமாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி அதனை புதிய நாடாளுமன்றத்தின் லோக் சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைத்தார்.

அடுத்த 150 ஆண்டுகளுக்கு செங்கோல் அந்த இடத்தில்தான் இருக்கும். இந்நிலையில் பிரதமர் மோடி செங்கோல் முன்பு சாஷ்டங்கமாக விழுந்து வணங்கியதை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். மோடியின் போட்டோவை தனது சோஷியர் மீடியா பக்கத்தில் ஷேர் செய்த அவர், மூச்சு இருக்கா? மானம்? ரோஷம் என காட்டமாக பதிவிட்டிருந்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜின் இந்த பதிவுக் கடும் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவினர் அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து வந்தனர். பொது மக்களும் நாட்டின் பிரதமரை இப்படி தரக்குறைவாக பேசுவது சரி அல்ல என கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்ததால் தனது சர்ச்சைக்குரிய பதிவை நீக்கினார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இந்நிலையில் மனோ தங்கராஜின் பதிவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு அவரை கடுமையாகவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இதை எழுதியவருக்கு அறிவிருக்கிறதா? என கேட்டுள்ள பொன் ராதா கிருஷ்ணன்,

இவரது செருப்பே துடிக்கும் இவரை அடிக்க என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஊரை அடித்து உயிர் பிழைப்போருக்கு செங்கோலையும் அதை மதிப்பவரைப் பற்றியும் என்ன தெரியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். செங்கோல் – மதம் சார்ந்தது அல்ல, அது அறம் சார்ந்த ஆட்சியின் சான்று என குறிப்பிட்டுள்ள பொன் ராதாகிருஷ்ணன், அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பு.

அணு அளவும் பொதுப் பணத்தை திருடா தன்மை என பதிவிட்டுள்ளார்.

மேலும் செங்கோலுக்கு சரண் என்றால் செம்மைக்கு சரண். செந்தமிழுக்கும் தமிழர் பண்புக்கும் சரண். ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சரை, அரசை தர்மம் தண்டிக்கும். தண்டமிட்டு வணங்கிய பிரதமரை தமிழர் போற்றுவர், தர்மம் வழி நடத்தும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.