கோப்பையை தட்டி தூக்கிய சிஎஸ்கே… முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கர் பாருங்க!

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருந்த இந்த போட்டிகள் மழைக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் சென்னை அணி ஆட்டத்தை தொடங்க தாமதமானது. மழை மற்றும் தாமதம் காரணமாக சென்னை அணிக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விளையாடிய சென்னை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை அணிக்கு ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்ரி அடித்து வெற்றியை வசமாக்கி கொடுத்தார் ஜடேஜா. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜடேஜாவை கட்டியணைத்து தூக்கி கொண்டாடினார் சென்னை அணியின் கேப்டனான தோனி. கோப்பையை தட்டி தூக்கிய சென்னை அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகரான முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளை நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரான ஸ்டாலின், சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்.. இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி.. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்று தந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.