Hyundai Exter Suv – ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி படங்கள் வெளியானது

டாடா பஞ்ச் எஸ்யூவி காருக்கு எதிராக வெளியிட உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடல் ஜூலை 10 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. காரின் வெளிப்புற தோற்றத்தை முழுமையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரூ.6.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டு கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை பெற்று EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது.

Hyundai Exter Suv Design

பாக்ஸ் வகையான தோற்றத்தை பெற்று H வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட் உடன் ரன்னிங் லேம்ப்களுடன் ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் கொண்டுள்ளது.

காஸ்மிக் ப்ளூ மற்றும் ரேஞ்சர் காக்கி ஆகிய இரண்டு புதிய நிறங்களுடன், டாம்பாய் காக்கி, டைட்டன் கிரே, ரெட் மற்றும் ஸ்டேரி நைட்  ஆறு ஒற்றை நிறங்கள் மற்றும் மூன்று டூயல்-டோன் வெளிப்புற வண்ணங்களில் கருப்பு நிறத்துடன் கூடிய டாம்பாய் காக்கி, காஸ்மிக் ப்ளூ, வெள்ளை ஆகியவை உள்ளது.

Hyundai Exter suv

பின்புறத்தில் பெரிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், H வடிவ எல்இடி டெயில் விளக்கு, டெயில்கேட்டில் கருப்பு பேனல் ஆகியவை கொடுக்கப்பட்டு வெகுவாக கவர்ந்திழுக்கும் அம்சத்தை கொண்டதாக வருகிறது

எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் ஹெட்லைட், H- வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் உடன் 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) பெற்று 40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக எலக்ட்ரிக் சன்ரூஃப்  இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியவை உள்ளது.

Hyundai Exter car

Exter Engine specs

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 83 hp குதிரைத்திறன் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

hyundai exter suv get sunroof

Hyundai Exter Price and rivals

தற்பொழுது எக்ஸ்டர் காருக்கான முன்பதிவு ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ரூ.6.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடலுக்கு சவாலாக டாடா பஞ்ச், நிசான் மேக்னைட், சிட்ரோன் C3, மாருதி இக்னிஸ் ஆகியவை உள்ளது.

Hyundai Exter

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.