பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார். மேற்படி முடிசூட்டு விழாவானது இம்மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.௦௦ மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கவுள்ளது. இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இமயமலையில் மலையேற வந்த அமெரிக்கர் மரணம்! இந்த பருவத்தின் 4வது மலையேறி உயிரிழப்பு

Climber Dead In Himalayas: உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க மலையேறி ஒருவர் உயிரிழந்தார், இது இந்த பருவத்தின் நான்காவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது

வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்!!

நடிகர் மனோபாலாவின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் மனோபாலா திரைப்படங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார். … Read more

மழை கொட்ட போகுது..!! இந்த 5 மாநிலங்களுக்கு மஞ்சள் அலெர்ட்..!!

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் எனவும், பின்னர் மே 14-க்கு மேல் வெப்பம் மீண்டும் உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

Trisha: `முகநக முகநக முறுநகையே'- `பெயர் ஒன்றே போதும்; பட்டம் வேண்டாம்' பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

`பொன்னியின் செல்வன்’ த்ரிஷாவை இன்னும் அழகாக, குந்தவையாக எல்லோரிடமும் கொண்டு சேர்த்ததில் மகிழ்கிறார் த்ரிஷா. சினிமாவில் 21 வருடத்தில் அடியெடுத்த சந்தோஷத்தில் மின்னும் த்ரிஷா, இந்த பிறந்தநாளை வழக்கம்போல் எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார். போட்டோஷூட்டில் த்ரிஷா * சென்னையில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு முடித்தவர். எத்திராஜ் கல்லூரியில் இரண்டே வருடங்கள் மட்டும் பி.பி.ஏ., படித்தார். அதன்பின், சினிமா என்ட்ரி. * சினிமாவை அடுத்து ஒரு காதல் என்றால், அது உணவின் மீதுதான். செம foodie. சாப்பாட்டு … Read more

”திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கான ஆட்சி நிர்வாக ஃபார்முலா..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை, மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்றத் தலைப்பில் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாக இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக மீது சமூக வலைத்தளங்களில் … Read more

சித்தா பல்கலை. மசோதா விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: சித்தா பல்கலைக்கழக மசோதா விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். ‘திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். மேலும், தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேருக்கு காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட், கோ பைலட் உள்பட மூன்று பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலைப் பிரதேசமான கிஷ்த்வார் மாவட்டம் மார்வா பகுதியில் மச்னா கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து ராணுவ தரப்பில், “ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளானது. பைலட்டுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆனால், பாதுகாப்பாக உள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் … Read more

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்: ஆளுநர் சொல்வது போல் விதி இல்லை – விளக்கம் அளித்த மா.சுப்பிரமணியன்

துணை வேந்தர்களை ஆளுநர்கள் தான் நியமிக்க வேண்டும் என யுஜிசியில் எந்த விதியும் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வரும் நிலையில் தமிழக அரசை சீண்டும் வகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். ‘திமுக கூறும் திராவிட மாடல் நிர்வாகத்தை நான் பாராட்ட வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். முதலில், நிர்வாகத்தில் அப்படி எந்த ஒரு மாடலும் கிடையாது. திராவிட மாடல் என்பது … Read more