உழைப்பாளர் தினம்.. தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்.!

குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தொழிலாளர் தினத்தை  முன்னிட்டு வரும் இன்று (மே 1ஆம் தேதி) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை … Read more

ஓடும் ரயிலில் ஏறிய இளம்பெண்ணின் நிலையை பாருங்க..!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கரேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பாதம்மா. இவர் தனது கணவருடன் உலவபாடு செல்வதற்காக தெனாலி ரயில் நிலையத்திற்கு வந்தார். விஜயவாடாவில் இருந்து கூடூர் செல்லும் மெமோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். ரயில் பாபட்லா அடுத்த சீராலா ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது திருப்பாதம்மா கழிவறைக்கு செல்ல ரயிலில் இருந்து கிழே இறங்கினார். அவர் மீண்டும் வருவதற்குள் ரயில் புறப்பட்டது. இதனைக் கண்ட திருப்பாதம்மா வேகமாக ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார். அப்போது … Read more

என் பொண்ணோட வாழ்க்கையை நீ தானே சீரழிச்ச.. முன்னாள் காதலனை வெட்டி கொன்ற பெண்ணின் பெற்றோர்!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா பகுதியில் வசித்து வந்தவர் மகேஷ் (24). இவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார். இந்த நிலையில் மகேஷுக்கும் அந்த இளம் பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இளம் பெண் காதலுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் எனத் தொடர்ந்து … Read more

கோயல் பால் தொழிற்சாலையில் விஷ வாயு கசிவால் 11 பேர் பலி .. நீல நிறமாக மாறிய உடல்கள்..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷெர்பூர் சவுக் என்ற பகுதியில் கோயல் பால் பொருட்கள் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 7.15 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிரூட்டும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விஷ வாயு வெளியேறியுள்ளது. இதனை சுவாசித்த ஊழியர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். இந்த ஆலையை சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அருகில் வீடுகளில் இருந்தவர்களும் மயங்கி விழுந்தனர். … Read more

How to: ஆண்ட்ராய்ட் மொபைலில் அழித்த படங்களை திரும்ப எடுப்பது எப்படி? |How to recover deleted photos?

நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்ட் மொபைல்போன்தான் பயன்படுத்துகிறோம். Internal strorage மிகுந்து விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது கேலரியில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்து விடுவோம். அப்படி அழிக்கும்போது, தவறுதலாக நமக்கு வேண்டிய புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அழித்து விட்டால் அதனை எப்படி மீட்டெடுப்பது? விளக்கம் தருகிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் ஆர்.சர்வேஷ்… ஆர்.சர்வேஷ் “இப்போதுள்ள மொபைலில், கூகுளின் Default Gallery App தான் பெரும்பாலும் உள்ளது. அதில் உங்களுடைய புகைப்படத்தையோ, வீடியோவையோ அழித்த பின்பு குறைந்தபட்சம் 30 நாள்களுக்கு … Read more

பார்ட் டைம் கேட்டரிங்.. ரச அண்டாவில் விழுந்த கல்லூரி மாணவன் பலி.. பந்தியில் மாணவன் வெந்த ரசம்..?

சென்னை அருகே, பாக்கெட் மணிக்காக பந்தி பரிமாறச் சென்ற கல்லூரி மாணவர், கொதிக்கும் ரச அண்டாவிற்குள் விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகர் பகுதியைச் சேர்ந்த வேணு-கவிதா தம்பதியரின் மூத்த மகன் தான் சதீஷ். 20 வயதான சதீஷ் கொருக்குப்பேட்டையில் உள்ள KCS கல்லூரியில் BCA மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சதீஷ் படிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் தனது பாக்கெட் மணிக்காக, தச்சு வேலைப்பார்த்து வரும் தந்தைக்கு … Read more

கிராம சபை கூட்டங்களில் ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு

சென்னை: கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு எஸ்எம்சி குழுவின் தீர்மானங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு, இடைநிற்றல் குறித்து மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் இன்று … Read more

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு பயிற்சி பெறமுடியாது: தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி பெற முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, மருத்துவம் படிக்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், எஃப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (உள்ளுறை … Read more

செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடுகிறது

புதுடெல்லி: ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் … Read more

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்: இறையன்பு நடத்திய ஆய்வு!

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையால் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (30.04.2023 ) ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகள்? இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு! தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தால் ரூபாய் 60.55 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 112 குறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளவாறு தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வரும், 1.31 இலட்சம் சதுர அடி … Read more