கேரளா டூர் போறீங்களா? எச்சரிக்கை… இதை பாருங்க!

தென்மேற்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் கேரள மாநிலத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைபெரிதும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்தமான் நிக்கோபர் தீவுகள், தெற்கு கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.​ பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கவும் ரெடி… பிரிஜ் பூஷன் சிங் பகீர்!​
கன மழைஇந்நிலையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பான முன் பருவ மழை கேரளாவில் தொடங்கியுள்ளது. பருவ மழை மாநிலத்தின் தென் மாவட்டங்களில் தொடங்கும் வரை இந்த மழை தொடரும் என கூறப்படுகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிகிறது.​ தென்மேற்கு பருவமழை எப்போது? இந்திய வானிலை மையம் பரபரப்பு தகவல்!​
மஞ்சள் எச்சரிக்கைநேற்று முதல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்கள் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​ ஆட்டத்தை ஆரம்பிக்கும் தென்மேற்கு பருவமழை… அடுத்த வாரத்தில் 2 புயல்கள்!​
ஜூன் 3, 4ஜூன் 3 ஆம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாக்குளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாக்குளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
​ ஹய்யோ… ஹய்யோ… நான் சும்மா சொன்னேன்.. நம்பிட்டீங்களா? அந்தர் பல்டியடித்த சரத்குமார்!​இடி மின்னலுடன்மேலும் லட்ச தீவு மற்றும் கேரளாவின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் மின்னலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்றும் இந்த நிலை ஜூன் 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.​ த்ரிஷா… எத்னிக் வியரில் என்னமா இருக்கார் பாருங்க… அசரடிக்கும் போட்டோஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.