Maamannan: மாமன்னன் படத்தின் கதை இதுதான்..ஓப்பனாக பேசிய மாரி செல்வராஜ்..தரமான சம்பவமா இருக்கும் போலயே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் தன்பக்கம் திரும்பி பார்க்கச்செய்தார் மாரி செல்வராஜ். மக்களிடையே வேறுபாடு இருத்தல் கூடாது, அனைவரும் சமம் என்ற உண்மையை தன் படத்தின் மூலம் உரக்க கூறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய கர்ணன் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தன் இரண்டாவது படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்ற மாரி செல்வராஜ் அந்த வாய்ப்பை திறன்பட பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ்

இந்நிலையில் கர்ணன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
உதயநிதி
ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படம் தான் அவரது கடைசி படமாம். அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்..

Ajith: விடாமுயற்சி படத்தில் முதலில் எடுக்கப்போவது இந்த காட்சிகள் தானாம்..அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

எனவே உதயநிதி நடித்துள்ள கடைசி படம் என்பதால் மாமன்னன் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவான இப்படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இவ்வாறு பல சிறப்பம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது.

மாமன்னனாக வடிவேலு

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் என பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பேசிய மாரி செல்வராஜ் மாமன்னன் கதையை பற்றி கூறியது தான் தற்போது வைரலாகி வருகின்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அவர் பேசியதாவது, நான் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்தின் கதையை உருவாக்குவதற்கு கமல்ஹாசனின் தேவர் மகன் படம் தான் காரணமாக இருந்தது எனலாம். அதே போல தான் மாமன்னன் படத்தையும் தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கத்தினால் உருவாக்கினேன். அப்படத்தில் வடிவேலு இசக்கி என்ற ரோலில் மிகவும் அருமையாக நடித்திருப்பார். அந்த இசக்கி கதாபாத்திரம் வளர்ந்து பெரியாளாக ஆனால் என்ன ஆகும் என்பது தான் மாமன்னன் படத்தின் கதை என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சொல்லப்போனால் தேவர்மகன் இசக்கி தான் இந்த மாமன்னன் என கூறியுள்ளார் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கத்தை மாமன்னன் படமும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க வடிவேலுவின் நடிப்பை காண ரசிகர்கள் ஆவலாக மாமன்னன் படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.