Mysskin – சைக்கோ மாதிரி படம் பண்ணாதீங்க – உதயநிதிக்கு மிஷ்கின் அட்வைஸ்

சென்னை: Mysskin (மிஷ்கின்) மாமன்னன் போல் படம் செய்யுங்கள் சைக்கோ மாதிரி படம் பண்ணாதீங்க என்று உதயநிதிக்கு இயக்குநர் மிஷ்கின் அட்வைஸ் செய்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. மாரி செல்வராஜும் அதனை ஒவ்வொரு பேட்டியிலும் உறுதிப்படுத்திவருகிறார்.

மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இது என்பதால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடந்தது. அரங்கத்துக்குள் செல்லும் வழியில் அறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் கூறிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

குவிந்த பிரபலங்கள்: இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் கமல்ஹாசன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர கீர்த்தி சுரேஷ், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோரும் க் கலந்துகொண்டனர்.

கேளிக்கை படம் இல்லை: இரண்டு படத்துலேயே இருபது படத்துக்கானப் பேர வாங்கியிருக்கார் மாரி செல்வராஜ். எல்லாமே கேளிக்கை படம் இல்ல. வாழ்வின் வலியை உணர்ந்து எடுத்த படம். அவனுக்கு என் பாராட்டுகள். இளையராஜாவுக்குப் பிறகு ஜீனியஸ் ஏ.ஆர்.ரஹ்மான் சார் அவர் ரொம்ப நாள் நல்லா வாழணும்.

சைக்கோ மாதிரி பண்ணாதீங்க: நாகேஷ் சாருக்குப் பிறகு, உடல்மொழியில் மதுரை பார்மை கொண்டு வந்து உலகெங்கும் சேர்த்தவர் வடிவேல் சார்தான். உதய், நீங்க நல்லா வேலை பாருங்க. 40 நாள் ஷூட்டிங் போற மாதிரி ஒரு படம் பண்ணுங்க, ‘மாமன்னன்’ மாதிரி படம் பண்ணுங்க ‘சைக்கோ’ மாதிரி பண்ணாதீங்க!. உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன். வெகு சீக்கிரத்தில் நம்மை எல்லாம் பார்த்துக்கொள்ளப் போகிறார் உதய். நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்” என்றார்.

ஷூட்டிங் போகாத உதயநிதி: மிஷ்கின் உதயநிதியை சைக்கோ படத்தை இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது தேர்தல் வந்ததால் உதயநிதி பிரசாரத்துக்கு சென்றுவிட்டதாகவும் பல காட்சிகளில் வேறு ஒருவர்தான் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.