16 கிலோ அம்பர்கிரிஸ்; விருதுநகர் அருகே சோதனையில் சிக்கிய கடத்தல் கும்பல்… சிறையிலடைத்த வனத்துறை!

பாலூட்டி வகையைச் சேர்ந்த திமிங்கலம் அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. திமிலங்கலம் வெளியிடும் `அம்பர்கிரிஸ்’ எனும் எச்சம், மருத்துவ குணம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. மேலும் அம்பர்கிரிஸ், அரபு நாடுகளில் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தபடுவதாகவும் தகவல் உள்ளது. இதனால் கடலில் திமிங்கலம் வெளியிடும் எச்சத்துக்கு கள்ளச்சந்தையில் பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு கிலோ திமிங்கல எச்சம் கோடிக்கணக்கான ரூபாய் என மதிப்பிடப்படுவதால், பணத்துக்காக திமிலங்கலம் வேட்டையாடப்படுவதைத் தடுக்க கடல்வாழ் உயிரின பாதுகாப்பு குழுவினர் உரிய நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இருப்பினும், சட்டவிரோதமாக அம்பர்கிரீஸ் கடத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்ந்து வருகிறது.

அம்பர்கிரிஸ்

அந்த வகையில், திருநெல்வேலியிலிருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு அம்பர்கிரிஸ் கடத்தி வரப்படுவதாக வனப்பாதுகாப்பு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை வனக்காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையைச் சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் ஆகியோர் விருதுநகர் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகிக்கும் வகையில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் கொண்டுவந்த மூட்டையில் திமிங்கல எச்சம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகையில், அவர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 40), பத்மகுமார் (34), விருதுநகரைச் சேர்ந்த மனோகரன் (58), தர்மராஜ் (54), ராஜாமன்னார் (62) ஆகியோர் எனத் தெரியவந்தது‌.

கைது

இதைத் தொடர்ந்து, 5 பேர்மீதும் வனப்பாதுகாப்புப் படையினர் வழக்கு பதிவுசெய்து, அவர்களைக் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மூட்டையில் 16 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.