Dada politician gets life in 32-year-long murder case | 32 ஆண்டு இழுத்தடிக்கப்பட்ட கொலை வழக்கில் தாதா அரசியல்வாதிக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ :காங்., பிரமுகர் கொலை வழக்கில், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மவு சதார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில், ஐந்து முறை பதவி வகித்தவர் முக்தார் அன்சாரி, 59. பிரபல தாதாவான இவர் மீது, பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

latest tamil news

வாரணாசியில், 1991 ஆகஸ்டில், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அஜய் ராய், அவரது சகோதரர் அவதேஷ் ராய் தங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு தன் கூட்டாளிகளுடன் வந்த முக்தார் அன்சாரி, அவதேஷ் ராயை சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பான வழக்கு, வாரணாசியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து இந்த வழக்கு,எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த 32 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது.அவதேஷ் ராயை கொலை செய்த முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவனிஷ் கவுதம் தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.