US Presidential Election: Mike Pence vs Trump | அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை எதிர்த்து மைக் பென்ஸ் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024ல் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் டிரம்ப் அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்தார். கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார் .


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.