திருப்பதி ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் பக்தர் குடும்பம்… கழுத்துல பாருங்க!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்றது. காணிக்கை பெறுவதிலும் உலகளவில் முன்னணியில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதனால் மாதம் தோறும் கோடிகளில் வசூல் குவிந்து வருகிறது. இதனால் பணக்கார கோவிலாகவுட் பார்க்கப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில்.

ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பேர் பலி? அதிகாரிகள் தகவலால் அதிர்ச்சி!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் குடும்பம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதற்கு காரணம் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களே ஆகும். மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனி நானுராம் தய்ராம் என்ற பக்தர், தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது குடும்பத்தினர் 4 பேரும் திருப்பதி வெங்கடாஜலபதி மீதான பக்தியை வெளிப்படுத்தும் வகையில் மெகா சைஸ் தங்க செயின் மற்றும் டாலர்களை அணிந்திருந்தனர். கைகளில் 10 விரல்களிலும் ஏழுமலையான் மற்றும் அவர் தொடர்புடைய மோதிரங்களை அணிந்திருந்த அவர்கள் பெருமாள் மற்றும் மகாலட்சுமி உருவத்துடன் கூடிய டாலரையும் அணிந்திருந்தனர்.

அரபிக் கடலில் உருவாகும் புயல் பெயர் “பிபர்ஜாய்”… என்ன அர்த்தம் தெரியுமா?

தங்கச் செயினில் கற்களால் பதிக்கப்பட்ட பெருமாளின் டாலர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. சோனி நானுராம் தய்ராம் குடும்பத்தை சேர்ந்த 4 பேருமே கண்களை பறிக்கும் வகையிலான ஆபரணங்களை அணிந்திருந்தனர். இவர்கள் குடும்பத்துடன் அணிந்திருந்த இந்த நகையின் எடை 30 முதல் 50 சவரன் என கூறப்படுகிறது.

சோனி நானுராம் தய்ராம் குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகளை அவர்களை கடந்து சென்ற அத்தனை பக்தர்களும் நின்று பார்த்து ரசித்து சென்றனர். ஆபரண பிரியரான பெருமாளுக்கே டஃப் கொடுக்கிறது இந்த குடும்பம் என சமூக வலைதளங்களில் கமெண்டுகளும் பறந்து வருகின்றன.

சிவப்பு நிற லெஹாங்காவில் அழகு தேவதையாய் ஸ்ரீதேவி விஜயக்குமார்… அசத்தல் போட்டோஸ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.