Leo: லியோ இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றமா ? தீவிரமாக யோசித்து வரும் படக்குழு..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் ஒருபக்கம் லியோ மறுபக்கம் தளபதி 68 என செம பிசியாக இருக்கின்றார். தற்போது தன் ஒட்டுமொத்த கவனத்தையும் லியோ படப்பிடிப்பிலேயே செலுத்தி வருகின்றார் விஜய். இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் தளபதி.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் விஜய் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. எனவே தற்போது எங்கு திரும்பினாலும் தளபதி 68 படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது.

Dhanush: கமலால் தனுஷ் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்..தாக்கத்தை ஏற்படுத்திய உலகநாயகன்..!

இருப்பினும் லியோ படத்தின் மவுசு சிறிதளவு கூட குறையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் பல சாதனைகளை செய்யும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தான் லியோ மீது கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாக விஜய் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை லியோ வெளியாவதற்கு முன்பே அறிவித்துவிட்டார்.

தளபதியின் நம்பிக்கை

இந்நிலையில் விஜய் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கவுள்ளது. மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒருபக்கம் இருக்க படத்தின் வெளியீட்டிற்கு முன்பே லியோ தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டியுள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமம் என இப்படம் வெளியீட்டிற்கு முன்பே 400 கோடிவரை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

ஆலோசனையில் படக்குழு

இதையடுத்து அவர்கள் தற்போது படக்குழுவிடம் ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்களாம். அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் நடத்தினால் படத்திற்கும் அது ப்ரோமோஷனாக இருக்கும். எனவே லியோ ஆடியோ லான்ஜை வெளிநாட்டில் நடத்துமாறு அவர்கள் படக்குழுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

ஆனால் விஜய்யோ லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னையை தவிர்த்து கோவை, நெல்லை போன்ற ஊர்களில் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்களாம். எனவே படத்தின் தயாரிப்பாளர் தற்போது தீவிரமாக யோசித்து வருகின்றார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.