கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகம் ஆகவுள்ள கார்களின் பட்டியல் இதோ

இந்தியாவில் 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கொண்ட கார்கள்: குறைந்த விலை கார்கள் நாட்டில் அதிகம் விற்கப்படுகின்றன. நீங்களும் புதிய கார் வாங்கும் எண்ணத்தில் இருந்து உங்கள் பட்ஜெட் ரூ.10 லட்சம் வரை இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இன்னும் சில நாட்களில் மலிவு விலையில் சந்தையில் அறிமுகம் ஆகவுள்ள சில கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் மோட்டார் தனது புதிய மைக்ரோ எஸ்யூவியை ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இது EX, S, SX, SX(O) மற்றும் SX(O) என மொத்தம் 5 டிரிம்களில் கிடைக்கும். இதில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் கிடைக்கும். இதனுடன், சிஎன்ஜி விருப்பமும் இதில் கிடைக்கும். இதன் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை ரூ.11,000க்கு முன்பதிவு செய்யலாம்.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் ஆகஸ்ட் 2023 இல் அறிமுகப்படுத்தப்படலாம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடல் அதன் உட்புறங்களில் நிறைய புதுப்பிப்புகளைப் பெறப் போகிறது. இந்த காரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய 1.2 லிட்டர் tGDi பெட்ரோல் எஞ்சின் உள்ளிட்ட பல புதிய வடிவமைப்பு கூறுகள் இந்த எஸ்யூவியில் கொடுக்கப்படலாம். இந்த எஞ்சின் 125 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த காரின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்

நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சோனெட் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தக்கூடும். இதில் பல தொழில்நுட்ப அப்டேட்களை வாடிக்கையாளர்கள் பெறக்கூடும். இதனுடன், பல அம்சங்களும் இதில் கிடைக்கும். தற்போதுள்ள 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் CRDi டீசல் மற்றும் 1.0 லிட்டர் tGDi பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்படும்.

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ்

இந்த கார் 2024 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். இது 1.2 லிட்டர் i-VTEC இன்ஜின் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டிருக்கும். இது 90 bhp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உருவாக்கும். மேலும், புதிய வடிவமைப்பையும் இதில் காணலாம். அதில் ADAS கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

டாடா பஞ்ச் சிஎன்ஜி

அல்ட்ராசுக்குப் பிறகு, இப்போது டாடா பஞ்ச் சிஎன்ஜி பதிப்பிலும் வரப் போகிறது. இதில் பஞ்ச் போலவே 30 லிட்டர் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் ஃப்ளோருக்கு அடியில் பயன்படுத்தப்படும். இந்த காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கும். இது 77 பிஎச்பி பவரையும், 97 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும். இந்த எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கிடைக்கும்.

கூடுதல் தகவல்

உங்களிடம் கார் அல்லது பைக் இருந்தால், நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று உள்ளது. இது அடிக்கடி வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்வதுண்டு. வாகனங்களின் டயர்கள் விரைவாக தேய்ந்து போவதாக மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வாகனத்தின் டயர்கள் தேய்ந்து கிடப்பதற்குப் பின்னால், அந்த நிறுவனத்தை விட வாகன உரிமையாளரின் அலட்சியமே பெரிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, வாகனத்தின் டயர்கள் தேய்மானம் அடைந்தால், சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டயர் தேய்மானத்தைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்.  

– டயர் அழுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்
– அவ்வப்போது டயர்களை மாற்றவும்
– டயர் சீலண்டை பயன்படுத்துங்கள்
– எப்போது கார் டயர்களை மாற்றுவது சரி?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.