HMSI Extended Warranty Plus explained – ஹோண்டாவின் நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ் திட்டம் என்றால் என்ன ?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) அறிவித்துள்ள புதிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ் திட்டம் 250cc வரையிலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 10 வருட வாரண்டியை அறிவித்துள்ளது.

‘நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ்’ திட்டம் மூலம் வாகனத்தின் ஒன்பதாம் ஆண்டில் 91 நாட்களுக்குள் வாங்குபவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் பெற அனுமதிக்கிறது. உரிமையாளர்கள் மாறுபட்டியிருந்தாலும் வாரண்டியை பெற முடியும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

HMSI Extended Warranty Plus

250cc வரை உள்ள மாடல்களில் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களுக்கும் 120,000 கிலோமீட்டர் மற்றும் அனைத்து மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கு 130,000 கிலோமீட்டர் வரையில் இந்த வாரண்டியை பெற முடியும்.

‘நீட்டிக்கப்பட்ட வாரண்டி பிளஸ்’ திட்டத்தின் மூலம் முக்கியமான அதிக விலை பெற்ற என்ஜின் பாகங்கள் மற்றும் அத்தியாவசிய மெக்கானிக்கல் மற்றும் மின் பாகங்களை உள்ளடக்கியது. இது வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதமான விருப்பங்களில் தேர்ந்தெடுக்கும் வழியை வழங்குகிறது:

ஏழாவது வருடத்தில் வாகனங்களுக்கான மூன்று வருட பாலிசி, எட்டாவது ஆண்டில் வாகனங்களுக்கான இரண்டு வருட பாலிசி மற்றும் ஒன்பதாவது ஆண்டில் வாகனங்களுக்கான ஒரு வருட பாலிசி என தேர்வு செய்யலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையத்தில் இந்த திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம். வாகனம் வாங்கிய ஆண்டின் அடிப்படையில் விலை அமைப்பு மாறுபடும்.

  • 150cc வரையிலான மாடல்களுக்கு ஆரம்ப விலை ரூ.1,317
  • 150cc முதல் 250cc வரையில் உள்ள  மாடல்களுக்கு 1,667 என துவங்குகின்றது.

HMSI Extended Warranty Plus

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.