Lexus LBX – குறைந்த விலை லெக்சஸ் LBX எஸ்யூவி அறிமுகமானது

டொயோட்டாவின் யாரீஸ் கிராஸ் காரின் TNGA-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள லெக்சஸ் LBX எஸ்யூவி மாடல் இந்த பிராண்டின் குறைந்த விலை காராக விளங்க உள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட LBX இந்தியாவிலும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

அதிகப்படியான விற்பனை எண்ணிக்கை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள 1.5 லிட்டர் ஹைபிரிட் என்ஜின் பெற்ற எல்பிஎக்ஸ் காரின் அறிமுகம் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும்.

Lexus LBX Crossover

லெக்சஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. கிராஸ்ஓவர் LBX பரிமாணங்கள் 4,190 மிமீ நீளம், 1,825 மிமீ அகலம் மற்றும் 1,545 மிமீ உயரம், 2,580 மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டது.

Lexus LBX interior

இன்டிரியரில் டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் முடிந்தவரை எளிமைப்படுத்தப்பட்டு ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி வழங்கும் வகையில் 9.8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் வசதியுடன் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே ஆகியவை பெற்றுள்ளது.

லெக்சஸ் எல்பிஎக்ஸ் காரில் புதிய 1.5-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 134 bhp பவர் மற்றும் 185 Nm டார்க் வழங்குகின்றது. இதில் தானாக சார்ஜிங் ஆகின்ற பேட்டரியுடன் கூடிய ஹைப்ரிட் அமைப்பு உள்ளது.

Lexus LBX

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.