North Koreas Kim Jong Un passes secret order banning suicide | தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது. இது குற்றமாக கருதப்பட்டாலும், அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர பல வழிகளும் இருக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில் வடகொரியாவில் கடந்தாண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்கொலையை தடுக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வினோதமான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, நாட்டில் இனி தற்கொலைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.