போர் தொழில் பட முழு விமர்சனம்.! தரமான க்ரைம் திரில்லர்..

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘போர் தொழில்’. கடந்த சில நாட்களாகவே இந்தப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிரைம் த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் ‘போர் தொழில்’ படமும் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
திருச்சி புறநகர் பகுதியில் இளம் பெண்கள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வசம் செல்கிறது. சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உதவியாக புதிதாக பணியில் சேர்ந்துள்ள அசோக் செல்வன் வருகிறார். இந்த வழக்கை இவர்கள் எப்படி விசாரிக்கிறார்கள்? குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? கொலைகளுக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் இந்த ‘போர் தொழில்’.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குள் கதைக்குள் சென்றுவிடுகின்றனர். அதனை தொடர்ந்து பரபரப்பான விசாரணைக்கு நடுவில் முதல் பாதியிலே குற்றவாளியை கண்டுபிடித்து விடுகின்றனர். இதன்பிறகு இரண்டாம் பாதியில் என்ன இருக்கு என நினைத்தால் அங்கேயும் பல ட்விஸ்ட் வைத்து படத்தின் ஒவ்வொரு காட்சியையையும் பரபரப்பாக நகர்த்துகின்றனர்.

Leo: விஜய் பிறந்தாளுக்கு ஒன்னு இல்ல டபுள் ட்ரீட்: வெளியான கொல மாஸ் தகவல்.!

சரத்குமாருக்கு வழக்கமான போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றாலும் இந்தப்படத்தில் இறுக்கமான காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். அசோக் செல்வன் வெகுளியான போலீஸ் அதிகாரியாக கத்துக்குட்டியாக கவனம் ஈர்த்துள்ளார். படிப்பறிவு உள்ள அசோக் செல்வன், அனுபவ அறிவுள்ள சரத்குமார் இருவரும் தங்கள் பாணியில் இந்த வழக்கை விசாரிக்கும் விதம் படத்துக்கான சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மரணம்: துணை நடிகர் கைது.!

காதல், பாடல் காட்சிகள், பைட் எதுவும் இல்லாமல் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா. மொத்தத்தில் க்ரைம் திரில்லர் விரும்பிகளுக்கு தரமான விருந்தாக அமைந்துள்ளது ‘போர் தொழில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.