Maruti Suzuki Alto Tour H1 – டாக்சி சந்தையில் மாருதி ஆல்டோ டூர் H1 விற்பனைக்கு வந்தது

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆல்டோ K10 காரின் அடிப்படையில் டாக்சி பயன்பாட்டிற்கு என ஆல்டோ டூர் H1 வேரியண்ட் ரூ.4.80 லட்சத்தில் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்ற ஆல்டோ காரின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான மாடலாக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களுடன் 80kmph ஆக வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Alto Tour H1

Alto K10 காரில் இடம்பெற்றுள்ள 1.0L 3-சிலிண்டர் டூயல் ஜெட், டூயல் VVT என்ஜின் ஆனது பெட்ரோல் மாடலாக கிடைக்கும்ம் போது 65 bhp பவர் மற்றும் 89 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  சிஎன்ஜி எரிபொருள் கொண்டு செயல்படும் பொழுது 55 bhp பவர் மற்றும் 82.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தருகின்ற வர்த்தகரீதியான டாக்சி காராக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 1.0 லி பெட்ரோல் என்ஜின் 24.60 கிமீ/லி மற்றும் சிஎன்ஜி மாடல் 34.46 கிமீ/கிலோ வழங்கும் என மாருதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 55 லிட்டர் கொள்ளளவு பெற்ற சிஎன்ஜின் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஏர்பேக், லோட் லிமிட்டர்கள் மற்றும் ப்ரீ-டென்ஷனர் உடன் முன் இருக்கை பெல்ட்கள், சீட் பெல்ட் எச்சரிக்கை முன் மற்றும் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு நினைவூட்டல்கள், ஏபிஎஸ், ஈபிடி, என்ஜின் இம்மொபைலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் அதிவேகத்தை கட்டுப்படுத்தும் வேக கவர்னர் மூலம் மணிக்கு 80 கி.மீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆல்டோ டூர் H1 5MT வேரியண்ட் ரூ 4,80,500 மற்றும் ஆல்டோ டூர் H1 CNG 5MT வேரியண்ட் ரூ. 5,70,500 (எக்ஸ்-ஷோரூம் இந்தியா). டூர் H1 கார் மெட்டாலிக்  சில்க்கி சில்வர், மெட்டாலிக் கிரானைட் கிரே மற்றும் ஆர்க்டிக் ஒயிட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.