புகழ்பெற்ற காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம் | 120-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதலை – உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பூங்காவில் வசிக்கும் உலகின் மிகப்பெரிய முதலையான காசியஸ், இந்த வாரம் தனது 120-வது பிறந்தநாளை கொண்டாடியது. இந்த பூங்காவில் 1987-லிருந்து வாழ்ந்துவரும் இந்த முதலை, உலகின் மிகப்பெரிய முதலை என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கடும் குளிரான காஸ்கேட் மலைத்தொடரில், 24 மணி நேரத்திற்கும் மேலாக தனியாக இருந்த 10 வயது சிறுமி மீட்கப்பட்டிருக்கிறார்.

கொலம்­பி­யா­வின் அமே­சான் பகு­தி­யில் நடந்த விமான விபத்து ஒன்றில் மாயமான நான்கு குழந்தைகள், 40 நாள்களுக்குப் பிறகு கொலம்பியா ராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

உக்ரைன் ரஷ்யப்போர் இன்னும் நீடித்து வரும்நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு ஆதரவளிக்க உலக நீதிமன்றம் (World Court) அனுமதி அளித்திருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான போரிஸ் ஜான்சன், `பார்ட்டிகேட்’ விவகாரம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கென்யா நாட்டைச் சேர்ந்த ஒட்டப்பந்தய வீரரான Faith Kipyegon மகளிருக்கான 5000 மீட்டர் பிரிவில் புதிய சாதனை படைத்தார். 14 நிமிடங்கள் 5.20 நொடிகளில் ஓடி புதிய சாதனைப் படைத்திருக்கிறார்.

ரஷ்யா – உக்ரைன் போர்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பெலாரஸ் நாட்டுக்கு அணு ஆயுதம் வழங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் கூறியிருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புகழ்பெற்ற ‘Breaking Bad’ என்றத் தொடரில் நடித்த காமெடி நடிகரான Mike Batayeh தனது 52-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

புகழ்பெற்ற 2023-ம் ஆண்டுக்கான BET விருதுகளுக்கான நாமினேஷன்ஸ் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஜூன் 25-ம் தேதி நிகழவிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.