சென்னை: நடிகை ஷாலு ஷம்மு சமீபத்தில் செகண்ட் ஹேண்டில் ஜாகுவார் கார் வாங்கிய நிலையில், அதனை ஷோரூமில் இருந்து கெத்தாக ஓட்டிச் செல்லும் வீடியோவை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஷாலு ஷம்மு சமீபத்தில் ஜாகுவார் காரை வாங்கியதாக போட்டோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாலும்மாவை வாழ்த்தி வந்தனர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷாலு ஷம்மு குறுகிய காலத்திலேயே தனது கனவை நிறைவேற்றி உள்ளநிலையில், இப்படியொரு கெத்தான வீடியோவையும் போட்டுள்ளார்.
செகண்ட் ஹேண்ட்: நடிகை ஷாலு ஷம்மு 2018ல் வெளியான பயன்படுத்திய ஜாகுவார் காரை 45 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் டிவி பிரபலங்கள் பலரே காஸ்ட்லியான காரை இன்னமும் வாங்காத நிலையில், ஷாலு ஷம்மு வாங்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனது கனவை நனவாக்க கடுமையாக உழைத்து வந்த நிலையில், இத்தனை லட்சம் கொடுத்து சொகுசு காரை வாங்கிய ஷாலு ஷம்மு அது தொடர்பான வீடியோவையும் தற்போது வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.
பட்டாசு வெடித்து: ஜாகுவார் காரை ஷோரூமில் இருந்து வாங்கும் போது பட்டாசு வெடித்து பூ தூவி ஷாலு ஷம்முவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து கவரை திறந்து காரை காட்டும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஷாலு ஷம்மு.
மேலும், கார் சாவியை வாங்கும் போது பல நாள் கனவு நனவான சந்தோஷத்தில் ஷாலு ஷம்மு சிரிக்கும் அழகே தனி அழகு தான் என்றும் அந்த உணர்வு முதன்முறையாக கார் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் புரியும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
கெத்தாக கார் ஓட்டும் ஷாலும்மா: நடிகை ஷாலு ஷம்மு கார் சாவியை தனது கையில் வாங்கிக் கொண்டு கார் டோரை திறந்து உள்ளே அமர்ந்து காரை ஷோரூமில் இருந்து ஓட்டிக் கொண்டு வரும் முழு வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது வயிறை பற்றி எரிய வைத்துள்ளார்.
மேலும், அதற்கு கேப்ஷனாக Don’t Dream, Just Drive It. என்கிற அட்டகாசமான வாசகத்தையும் பதிவிட்டு பலருக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளார். பேக்ரவுண்டில் இசைக்கப்பட்ட அந்த விக்ரம் பாடல் பிஜிஎம்மும் தரம்.