ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள் – விசாரணைக்கு உத்தரவு

இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் நாளாக 5வது நாள் போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தனி ஒரு ஆளாக களத்தில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மறு முனையில் வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத போதிலும் அதிரடியாக ஆடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் களத்தில் இருக்கும் வரை இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

ஆனால் எதிர்பாரதவிதாக கேட்ச் என்ற முறையில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர். இதனால் 371 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. போட்டிக் பிறகுபேசிய பென்ஸ்டோக்ஸ், இன்னும் இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் பேரிஸ்டோவின் ரன் அவுட் திருப்பு முனையாக இருந்தது. அவர் பந்து கீப்பரிடம் சென்ற பிறகு கிரீஸூக்கு வெளியே வந்தார். ஆனால், அப்போது பந்து அலெக்ஸ் கேரி கையில் இருக்க, அவர் உடனடியாக ஸ்டம்பில் அடித்து அவுட் அப்பீல் செய்தார். 3வது நடுவரிடமும் அப்பீல் செல்ல அவர் அவுட் கொடுத்தார். இந்த விக்கெட் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பேரிஸ்டோவ் அவுட்டுக்கு எதிராக கடுமையாக குரல்களை எழுப்பினர். 

@SkyCricket) July 2, 2023

உட்சபட்சமாக போட்டியின் நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வறைக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் கடுமையாக பேச, உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இதனால் மைதானத்தில் சற்று சலசலப்பு உருவானது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற பிறகும்கூட இங்கிலாந்து ரசிகர்கள் அவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து விசாரணை நடத்துமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வாரியத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.