சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி கோலிவுட்டில் மிகவும் சிறப்பான ஜோடியாக காணப்படுகின்றனர். வருடங்கள் கடந்தாலும் இவர்களது லுக்கும் அன்னியோன்யமும் மாறாமல் உள்ளது.
ஒருபுறம் சூர்யா சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துவரும் நிலையில் மறுபுறம் ஜோதிகாவும் தேர்ந்தெடுத்தப்படங்களில் நடித்து வருகிறார். இவரது ரீ என்ட்ரி 36 வயதினிலே படம்மூலம் சிறப்பாக அமைந்தது.
இவர்கள் இருவரும் சினிமா சூட்டிங் தவிர்த்து மற்ற இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வருகின்றனர். சமீபத்தில் கொடைக்கானலிலும் இவர்களை இணைந்து பார்க்க முடிந்தது.
குடும்பத்துடன் டென்மார்க்கில் சூர்யா விடுமுறை கொண்டாட்டம்: நடிகர் சூர்யா அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வித்தியாசமான ஜானர்களில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சூர்யாவிற்கு சிறப்பாக அமைந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரும் அவருடைய அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் வரலாற்று கதைக்களத்தை மையமாகக் கொண்ட கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் அடுத்த ஆண்டில்தான் ரிலீசாகவுள்ளது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் உள்ளதால் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில்தான் இருக்கும் என்ற தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காடுகள் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் சூட்டிங்கின்போது ஜோதிகாவும் சூர்யாவுடன் காணப்பட்டார். ரசிகர்களுடன் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வெளிநாட்டில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கான வீடியோவை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ட்விட்டரிலும் சூர்யா பெயர் ட்ரெண்டாகி, இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. ஜோதிகாவும் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தாங்கள் சென்ற நாடுகளின் ரூட் மேப்பையும் ஷேர் செய்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. தங்களின் குழந்தைகளுடன் அவர்கள் இந்த விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சில தினங்களில் கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்யவுள்ள சூர்யா அடுத்ததாக சுதா கொங்குரா இயக்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டிலும் பிரபல இயக்குநருடன் சூர்யா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் கொடுத்த பேட்டியொன்றில் விரைவில் வாடிவாசல் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது லண்டனில் இதன் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.