சென்னை :வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் (ஜூலை 5) மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம்
எச்சரித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேற்கு திசை காற்றிலும் வேக மாறுபாடு காணப்படுகிறது. சில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும்
பெய்யும்.
இன்று நீலகிரி, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி,
விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். தெற்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு, கேரள, கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசுகிறது. ஜூலை 8 வரை வங்க கடலில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement