Maamannan: முதல்வர் ஸ்டாலின் இரவு 11 மணிக்கு போன் செய்தார்: மாமன்னன் வடிவேலு சொன்ன சுவராஸ்ய தகவல்

MK Stalin: மாமன்னன் படம் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்த காரியம் குறித்து தெரிவித்துள்ளார் வடிவேலு.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பக்ரீத் பண்டிகை அன்று ரிலீஸான மாமன்னன் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான 9 நாட்களில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் சென்னையில் நடந்த சக்சஸ் மீட்டில் வடிவேலு பேசியது அனைவரையும் கவர்ந்துவிட்டது.பா. ரஞ்சித்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​வடிவேலு​வடிவேலு கூறியதாவது, மாமன்னன் படக் கதையை கேளுங்கள் என்று கூறி மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பி வைத்தார் உதயநிதி ஸ்டாலின். ஒரு வரி கதை சொன்னார் மாரி. அதை கேட்டதுமே எனக்கு சந்தோஷமாக இருந்தது. படத்தில் நடிப்பிற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. நகைச்சுவைக்கு வாய்ப்பே இல்லை. இந்த படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இந்த கதையை ஒப்புக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மன்னாதி மன்னன் என்றார்.
​மாரி செல்வராஜ்​20, 30 படம் இயக்கிய அனுபவத்தை மாரி செல்வராஜிடம் பார்த்தேன். வாழ்க்கையில் பசி, பட்டினியை பார்த்து வந்தவன் நான். மாரி செல்வராஜும் அப்படித் தான். அதனால் அவருடன் எளிதில் கனெக்ட் ஆக முடிந்தது. அவரின் வலியுடன் மற்றவர்களின் வலியையும் சேர்த்ததால் அனைவருக்கும் பொருந்தியது என வடிவேலு மேலும் தெரிவித்தார்.

​Krithi Shetty: பிரபல நடிகரின் மகன் எனக்கு தொல்லை கொடுக்கிறாரா?: விஜய் சேதுபதி ‘மகள்’

​கன்டிஷன்​நீங்கள் சிரிக்கவே கூடாது எனக்கு கன்டிஷன் போட்ட ஒரே படம் இது தான். எங்குமே சிரித்துவிடக் கூடாது என மாரி சொன்னார். எங்குமே யாரையும் சிரிக்க வைத்துவிடக் கூடாது என நான் போராடினேன். மாமன்னனை பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்து முதல்வர் பாராட்டினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பலரும் என்னை பாராட்டினார்கள் என்றார் வடிவேலு.
​மக்களுக்கு நன்றி​குடிபோதையில் நடுரோட்டில் சண்டை போட்ட விஜய்யின் லியோ பட நடிகர், சூர்யா பட நடிகர்ஒரு அற்புதமான படத்தில் நடித்திருக்கிறேன். இது என் வாழ்க்கையிலும் நடந்தது தான். இந்த படத்தில் நடிக்க பயந்து அந்த வாய்ப்பை இழக்கப் பார்த்தேன். இந்த படத்தில் நான் மட்டும் அல்ல அனைவரும் ஹீரோ தான்.
மாரி செல்வராஜ் தான் முக்கியமான ஹீரோ. அவரின் வயதுக்கு மீறிய படம் மாமன்னன். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம். இது போன்ற வெற்றிப் படத்தை கொடுத்த மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வடிவேலு.

​உதயநிதி ஸ்டாலின்​மாரி செல்வராஜின் மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக இருக்கும் அவர் முழு நேர மக்கள் பணி செய்யவே இனி நடிப்பு வேண்டாம் என முடிவு எடுத்துவிட்டார். வெற்றிப் படத்துடன் ஓய்வு பெற்றிருக்கிறார் உதயநிதி. அவரின் கெரியரிலேயே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது மாமன்னன். இதற்கிடையே மீண்டும் நடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலினிடம் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.