தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன பாயிண்ட்… நடிகர் விஜய் அரசியலும், அமலுக்கு வரும் திட்டங்களும்!

தமிழிசை சவுந்தரராஜன் ஊடகங்களில் தினசரி தலைப்பு செய்தியாக மாறி வருகிறார். புதுச்சேரி, தெலங்கானா என இருமாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். இருப்பினும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்திற்கு வந்துவிடுவார். அப்படியே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அரசியல் களத்திற்குள் சிக்கி கொள்கிறார்.

செந்தில் பாலாஜியை கிண்டல் செய்த தமிழிசை!

தமிழிசை அரசியல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவு கருத்துகள் கூறுவது முதல் முதலமைச்சர்

தலைமையிலான

அரசுக்கு அறிவுரைகள் சொல்வது வரை லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கின்றன. இதற்கிடையில் பிற அரசியல் கட்சிகளையும் விட்டு வைப்பதில்லை.

நடிகர் விஜய்யின் இரவு நேர பாடசாலை

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வழக்கம் போல் அரசியல் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் இரவு நேர பாட சாலைகளை தொடங்கியுள்ளார். இதுபற்றி பேசுகையில், என்னை பொறுத்தவரையில் படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை பாராட்டுவேன்.

அரசியல் உள்நோக்கம்

நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமூகத்தில் முக்கியத்துவம் பெற முடியும். குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் அதன் உள்நோக்கம் என்னென்னு, அதற்குள் வரவில்லை என்று தெரிவித்தார்.

வைத்திலிங்கம் சவால்

மேலும் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் விடுத்திருந்த சவால் குறித்து பதிலளிக்கையில், எங்கேயும் அரசியல் கருத்துகள் கூடாதுனு இல்லை. மக்கள் நலனை பார்த்து தான் பேசுகிறோம். புதுச்சேரியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

பேச்சுரிமை உண்டு

தமிழகத்தில் சில திட்டங்களை கொண்டு வர தாமதமானால், அதுபற்றியும் எடுத்துரைக்கிறோம். பேச்சுரிமை என்பது அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் நான் எவ்வளவு பேச வேண்டும் என்று வைத்திலிங்கம் வரையறை செய்கிறார்.

கட்சிக்காரர்களே கேட்பதில்லை

அந்த உரிமை அவருக்கு இல்லை. அவர் சொல்வது போல் நான் நடந்து கொள்ள முடியாது. அவர் சொல்வதை அவருடைய கட்சிக்காரர்களே கேட்க மாட்டார்கள் எனச் சிரித்து கொண்டே தமிழிசை சவுந்தரராஜன் சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.