ஹீரோவான பிரபல நடன இயக்குனர்!

நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழிலும், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக அவர் ஹீரோவாக நடிக்கும் ரன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று அவரது பிறந்தநாள் முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். போலீஸ் கதை களத்தில் நடக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் சவுத்ரி இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்கும் இப்படத்தை விஜயா தமருக்கா ஆர்ட்ஸ் நிறுவனம் … Read more

Maaveeran Audio Launch – மாவீரன் ஆடியோ வெளியீட்டு விழா.. தொகுப்பாளர்கள் யார் தெரியுமா?

சென்னை: Maaveeran Audio Launch (மாவீரன் இசை வெளியீட்டு விழா) மாவீரன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் இன்று மாலை நடக்கவிருக்கும் சூழலில் விழாவை தொகுத்து வழங்குபவர்களின் விவரம் தெரியவந்திருக்கிறது. பிரின்ஸ் படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அவர் நடித்த இரண்டு படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாய் வசூலித்த சூழலில் பிரின்ஸ் அடைந்த தோல்வி பேசுபொருளானது. எனவே மடோன் அஸ்வின் இயக்கத்தில் … Read more

வெம்பக்கோட்டை அகழாய்வில் வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் கண்டெடுப்பு

சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப்பகுதி தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021ல் தொடங்கப்பட்டன. அதில், சுமார் 3,500க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 2ம் கட்ட … Read more

வாரிசு அரசியலை வளர்க்க ஒன்று சேர்ந்த ஊழல் கட்சிகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா சாடல்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: பிஹார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டம் வாரிசுகளின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து நடத்தப்பட்டதாகும். ராகுலை பிரதமராக்க 21 ஊழல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாட்னாவில் ஒன்றுகூடிய 20-21 ஊழல் கட்சிகளும் மக்கள் நலனைப் பற்றி சிந்திக்கவில்லை. மாறாக தங்கள் மகன்களின் எதிர்காலத்தை பற்றியே சிந்திக்கின்றன. ஆனால் பாஜக நாட்டின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்கிறது. ஊழல் செய்தவர்கள் யாராக … Read more

தக்காளி விலை உயர்வு… ரேஷன் கடைகளுக்கு புது அப்டேட்டும், அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனையும்!

தக்காளி விலையா? இல்லை தங்கம் விலையா? என்று கேட்கும் அளவிற்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. இப்படித் தான் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், ட்ரோல்களும் தெறிக்க விட்டு வருகின்றனர். சென்னையில் நேற்றைய தினத்தை விட 10 ரூபாய் அதிகரித்து இன்று ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உச்சத்தை தொட்ட தக்காளி விலை தக்காளி விலை ஏற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய், 20 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளியை வாங்கிய இல்லத்தரசிகள், தற்போது … Read more

நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து

ஈரோடு நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுல்லது. அதில், “நாளை திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி ரயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில்) ஈரோட்டிலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். ரயில் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதே போல் ரயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு … Read more

வாரணம் ஆயிரம் தெலுங்கில் ரீ ரிலீஸ்!

கடந்த 2008ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அதேசமயம் தெலுங்கில் ‛சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். ஏற்கனவே இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று … Read more

Vijay: அரசியலில் விஜய்யுடன் கூட்டணியா..? போர் தொழில் சக்சஸ் மீட்டிங்கில் பொங்கிய சரத்குமார்

சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனையடுத்து போர் தொழில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பிய நிரூபருக்கு சரத்குமார் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். அரசியலில் விஜய்யுடன் கூட்டணியா? அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு ஆகியோர் நடித்த போர் தொழில் திரைப்படம் … Read more

காரைக்கால் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்திப் பெருக்குடன் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்ட பக்தர்கள்

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா இன்று (ஜூலை 2) நடைபெற்றது. அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், தேவாரத்துக்கு முன்பு திருவந்தாதி படைத்த பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட காரைக்கால் அம்மையார் … Read more

தலித், பெண்கள் உள்ளிட்ட 17 பேரை கோயில் அர்ச்சகர்களாக்கிய ராஜஸ்தான் அரசு: பிராமணர்கள் போராட்ட எச்சரிக்கை

புதுடெல்லி: ராஜஸ்தானில் ’தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை அதற்கான அர்ச்சகர்களையும் நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. இப்பணிக்கு கடைசியாக 2014-ல் விளம்பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 வருடங்களுக்கு பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டனர். அதன் பிறகு தற்போதையகாங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி … Read more