எனக்கு பயமில்ல, அதுக்கு இதான் சாம்பிள், மஸ்க் உடன் சண்டைக்கு நாள் குறித்த மார்க் சக்கர்பெர்க்!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் இடையே மல்யுத்த போட்டி நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல முறை மஸ்க் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக, தான் நிறைய கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாகவும், ஜிம் சென்று வர்க்-அவுட் செய்ய முடியாததால், அலுவலகத்திலேயே உடற்பயிற்சிக்கான எடைகளை எடுத்து வந்துவிட்டதாக மஸ்க் ட்விட்டரில் பதிவவிட்டிருந்தார்.

நாள் குறித்த மார்க்
இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தனது திரெட் பக்கத்தில் மார்க்,’சண்டைக்கு நான் தயாராக இருக்கிறேன். மஸ்க் இடம் ஆகஸ்ட் 26ம் தேதி சண்டையை வைத்துக் கொள்ளலாம் என தேதியை பெரிந்துரைத்துள்ளேன், ஆனால், இதுவரை மஸ்க் அவர்தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை. எனக்கு இந்த சண்டையில் பயமில்லை’ என்பது போல பதிவிட்டிருக்கிறார். மேலும், இந்த விளையாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். தொடர்ந்து இவ்வகை போட்டிகளில் கலந்துக்கொள்ள எண்ணுகிறேன் என மார்க் தனது திரெட்ஸ் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

வரலாற்றில் முதன் முறையாக
சமீபத்தில் தான் எலான் மஸ்க், Musk Vs Zuck இடையே நடக்கவிருக்கும் சண்டையை லைவாக ஒளிபரப்பி அதன்மூலம் வரும் வருமானத்தை போர்வீரர்களுக்கான சேவைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஒருவழியாக, இரு மாபெரும் டெக் ஜெயிண்டுகள் இடையே உலக வரலாற்றில் முதன் முறையாக குத்துச்சண்டை போட்டி நடக்கவிருப்பது இதுவே முதல் முறை. அதுவும், கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் மஸ்க்
மேலும், தங்கள் இருவருக்கும் இடையே நடக்கவிருக்கும் சண்டைக்கு முன்னதாக, கழுத்து மற்றும் பின்பகுதியில் MRI ஸ்கான் செய்துக்கொள்ள மஸ்க் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவை இருந்தார் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் எலான் மஸ்க் தரப்பில் வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.