Sathyaraj: நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட சோகம்: திரையுலகினர் இரங்கல்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சத்யராஜ். திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி கண்டார். தற்போது குணச்சித்திர நடிகராக கலக்கி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சோகம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 களில் சினிமாவில் வில்லனாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் சத்யராஜ். தனது நக்கல் பேச்சால் ரசிகர்களை கவர்ந்த இவர் கவுண்டமணியுடன் இணைந்து பல எவர்கிரீன் காமெடிகளை கொடுத்துள்ளார். வில்லனாக இருந்து ஹீரோவாகவும் பல ஹிட் படங்களை கொடுத்தார் சத்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வரும் சத்யராஜ் ‘பாகுபலி’ படத்தில் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் மூலம் இந்திய சினிமா அறியும் நடிகராக மாறினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக ஏறபட்ட பிரச்சனைகள் காரணமாக கடந்த சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று மாலை நான்கு மணியளவில் சத்யராஜின் தாயார் காலமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் வயது 94.

கோவையில் வசித்து வந்த நாதாம்பாள் அங்கு உயிரிழந்துள்ளார். இவருக்கு சத்யராஜ் தவிர கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தாயார் உயிரிழந்த செய்து கேள்விப்பட்டு ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவைக்கு விரைந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான கோவையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.