Jailer Box Office Collection 1st week: ஜெயிலர் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடிப்பு: உலக அளவில் ரூ. 400 கோடியை நெருங்குது

ஜெயிலர் படம் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்துவிட்டது. மேலும் உலக அளவில் ரூ. 400 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸானது. படம் வெளியான நாளில் இருந்து ஜெயிலர் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. இதனால் ஜெயிலர் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.தலைவர்​ரஜினி படம் என்றாலே கலெக்ஷனுக்கு பஞ்சமில்லை – கமலா தியேட்டர் ஓனர் பேட்டி​​ரூ. 200 கோடி​ஜெயிலர் படம் ரிலீஸான 6 நாட்களில் இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்திருக்கிறது. மேலும் உலக அளவில் ரூ. 400 கோடியை தொடப் போகிறது. படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 300 கோடி வசூலித்தது ஜெயிலர். வார நாட்களாக இருந்தாலும் கூட ஜெயிலரை பார்க்க பலரும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் ஜெயிலரின் வசூல் வேட்டையை தற்போதைக்கு நிறுத்த முடியாது.

​Jailer Collection: நாலே நாளில் ரூ. 300 கோடி வசூலித்த ஜெயிலர்: இந்தியாவில் மட்டும்…

​வசூல் வேட்டை​ஜெயிலர் பற்றி பலரும் சமூக வலைதளங்களில் நல்லவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதை பார்த்து தான் மற்றவர்கள் தியேட்டர்களுக்கு கிளம்புகிறார்கள். ஜெயிலரை எல்லாம் செல்போனில் பார்த்தால் நன்றாக இருக்காது, தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயிலர் படம் வெளியான கையோடு அது ஆன்லைனில் கசிந்துவிட்டது. ஆனால் அதையும் தாண்டி ஜெயிலர் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
​கேரளா​ஜெயிலர் படம் கேரளா, தெலுங்கானா, ஆந்திராவிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் நான்கு நாட்களில் ரூ. 32 கோடி வசூல் செய்தது. கேரளாவில் ஆறு நாட்களில் ரூ. 33.5 கோடி வசூல் செய்திருக்கிறது. அமெரிக்காவிலும் ஜெயிலரின் வசூல் அமோகமாக இருக்கிறது. விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு ஆகிய படங்கள் அமெரிக்காவில் வசூல் செய்த மொத்தத்தையும் ஒரே நாளில் முந்திவிட்டது ஜெயிலர்.
​சாதனைகள்​இதென்னய்யா தமன்னாவுக்கு இப்படியாகிடுச்சே!ஜெயிலர் படம் ரிலீஸானதில் இருந்து வசூலில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் வெளியான தமிழ் படங்களில் பெரிய ஓபனிங் கிடைத்தது ஜெயிலருக்கு தான். கர்நாடகாவிலும் ஜெயிலரை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஜெயிலரில் ரஜினியை வைத்துக் கொண்டே சிவராஜ்குமார் கெத்து காட்டியது கர்நாடக மாநில ரசிகர்களை கவர்ந்துவிட்டது.

​சிவராஜ்குமார்​சிவராஜ்குமாரின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார் சிவராஜ்குமார். அவர் செல்லும் இடமெல்லாம் ஜெயிலர் படத்தில் உங்களின் நடிப்பு மாஸாக இருந்தது, கெத்தாக இருந்தது என ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

​இமயமலை​ரஜினி தற்போது இமயமலை பயணத்தில் இருக்கிறார். தான் இமயமலை வந்ததற்கும், ஜெயிலர் படம் ஹிட்டானதற்கும் தொடர்பு இருப்பதாக தன் நண்பர்களிடம் கூறி சந்தோஷப்பட்டிருக்கிறார். ஜெயிலர் படம் குறித்து நண்பர்கள் அவருக்கு போன் செய்து அப்டேட் கொடுத்து வருவதுடன், பாராட்டவும் செய்கிறார்கள். புது தெம்புடன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரஜினி.

​Rajinikanth: விபூதி, குங்குமம், ருத்ராட்ச மாலை, சாந்தமே உருவாக ரஜினி: சூப்பர் ஸ்டாரின் இமயமலை ட்ரிப் வைரல் போட்டோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.