நாளை தோன்றுகிறது அரிய சூரிய கிரகணம் | A rare solar eclipse will occur tomorrow

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: இந்தாண்டின் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை (அக்.14) வானில் தோன்ற உள்ளது.

இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது காரணம் இந்திய நேரப்படி, நாளை (அக்.14) சனிக்கிழமை இரவு 08.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு ,மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக அரிய நிகழ்வை காண முடியும். இந்நிகழ்வை நாசா நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மகாளய அமாவாசை தினத்தில் 178 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சூரிய கிரகணத்தை நாசா இணைய தளத்தில் காணலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.