மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க புதிய முயற்சி

போபால்,

மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மற்ற மாநிலங்களில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17, மிசோரமில் நவம்பர் 7, ராஜஸ்தானில் நவம்பர் 23, தெலங்கானாவில் நவம்பர் 30-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படும்.

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை ஊக்குவிக்க உணவகங்கள் புதுமையான முயற்சியை அறிவித்துள்ளன. அதன்படி நவம்பர் 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று, காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களுக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ இலவசமாக வழங்கப்படும் என்று இந்தூரில் ’56 சப்பன் துக்கன்’ எனும் பல்வேறு உணவுவகைகள் விற்கும் உணவகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவீதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன. மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.