எனது சிறந்த மகள் கார்த்திகா : ராதா நெகிழ்ச்சி

தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மும்பை மற்றும் கேரள மாநில கோவளம் பகுதியில் கணவருடன் இணைந்து நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார். தற்போது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். இவரது மூத்த மகள் கார்த்திகா தமிழில் 'கோ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த வா டீல் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

கார்த்திகாவால் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகி தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார். தற்போது கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் ராதா எழுதியிருப்பதாவது:

புதிய குடும்பத்திற்கு எங்கள் பெண்ணை கொடுப்பதை நினைத்து பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை கொடுத்து கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அழகான புதிய குடும்பத்தை தேர்ந்தெடுத்த நான் அதிர்ஷ்டசாலி. ஒரு திருமணத்தின் மூலம் இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்கிறது. என் இதயம் இப்போது பல உணர்வுகளுடன் கலந்து ஓடுகிறது. அதில் அன்பும், மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கிறது. கார்த்திகா எனது மிகச் சிறந்த மகள், எங்கள் குடும்பத்தின் பரிசு. இந்த அற்புதமான அனுபவத்தை எனக்கு அளித்த கார்த்திகாவுக்கு நன்றி. என்று எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.