நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்வு

புதுடெல்லி,

நேபாளத்தில் நேற்று ரிக்டர் 6.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நேபாள மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.