வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமராவதி : திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திராவில், முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு வாரியத்தில் ரூ. 371 கோடி சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு கடந்த செப்., 9ல் தேதி சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு தரப்பில் ஜாமின் வழங்கக்கோரி ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.20 ம் தேதி ஜாமின் வழங்கி உடல்நலம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் வரும், 28ம் தேதிக்குள் நீதிமன்றத்திலோ அல்லது சிறை அதிகாரியிடமோ ஒப்படைக்க சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திறன் மேம்பாட்டு வாரிய ஊழல் தொடர்பாக ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெல்லா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா, சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.08-ம் தேதிக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement