திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் இரு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த […]