இந்த 4 வீரர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்… இவர்களின் இடத்திற்கு எந்த பிரச்னையும் வராது!

India National Cricket Team: தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில், அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கத்துடன் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியாவை தென்னாப்பிரிக்கா அடக்கியது எனலாம். 

அந்த வகையில், தொடரின் வெற்றியை இறுதிசெய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணி (Team India) பேட்டிங் செய்ய அழைத்தது. கடந்த போட்டியை போலவே இந்திய பேட்டிங் ஆர்டர், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சில் சுருண்டு விடும் என நினைத்த நிலையில், ராஜத் பட்டீதர் பவர்பிளேயில் காட்டிய அதிரடி தென்னாப்பிரிக்காவுக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. 

இருப்பினும், பட்டீதர், சாய் சுதர்சன் (Sai Sudharsan) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுலும் சொதப்ப அணியை சரிவில் இருந்து மீட்டவர் சஞ்சு சாம்சன்தான் (Sanju Samson). இந்திய அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்தால், இரண்டாவது பேட்டிங் செய்யும் இந்திய அணி 218 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாலும் இந்திய ஒருநாள் அணியில் இந்த நான்கு வீரர்களின் இடம் என்பது உறுதியாகி உள்ளது எனலாம்.

அதாவது இந்திய ஒருநாள் அணியின் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் (Rinku Singh) ஆகியோரின் இடம் என்பது தற்போது உறுதியாகி உள்ளது எனலாம். ஓப்பனிங்கில் சுப்மான் கில் வரும்போது, சாய் சுதர்சன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், அடுத்து விராட் கோலி அல்லது ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ரிங்கு சிங் ஆகியோர் பேட்டிங் ஆர்டரில் வலுசேர்ப்பார்கள். பந்துவீச்சில் சிராஜ், பும்ரா, ஷமி என வேகப்புயல்கள் இன்னும் கம்பீரமாக இருந்தாலும் அர்ஷ்தீப் சிங்கின் இடதுகை வெரைட்டி இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்பதை இந்த தொடர் உறுதி செய்துள்ளது. 

அதன்மூலம், இந்திய அணி அடுத்து நீண்ட காலத்திற்கு பின்னரே ஒருநாள் போட்டிகளை விளையாடும் என தெரிகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐபிஎல் தொடர், டி20 உலகக் கோப்பை என தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் எதும் இல்லை. எனவேதான், ஒருநாள் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது இனிவரும் காலம்தான் முடிவு செய்யும். இருப்பினும், சாய் சுதர்சன், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) ஆகியோரின் இடம் 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறிதுகாலம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளனர். தற்போது வரும் டிச. 26ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, அஸ்வின், ஜடேஜா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ் என உலகக் கோப்பைில் விளையாடிய முக்கிய வீரர்கள் விளையாட உள்ளனர். தொடர்ந்து ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரிலும் மூத்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களை மீண்டும் களமிறங்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.