
ரூ.300 கோடி வசூலைக் கடந்த டங்கி படம்
ராஜ்குமார் ஹிராணி, ஷாருக்கான் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இந்த படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 250 கோடியை கடந்த நிலையில் இப்போது 7 நாட்களில் ரூ. 305 கோடி உலகளவில் வசூலித்துள்ளது இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூல் என்கிறார்கள். மேலும், இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் உலகமெங்கும் வெளியானது மற்ற மொழிகளில் டப் செய்ய படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.