சென்னை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக டி ஜி பி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில் தமிழகக் காவல்துறை தலைவர் நேற்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் காணப்படும் முக்கிய அம்சங்கள் வருமாறு “தொடர்ந்து 3 ஆண்டுகள் சொந்த ஊர் மற்றும் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் வரும் […]
