Municipal Corporation employees cleaned the Gnanawabi campus tank | ஞானவாபி வளாக தொட்டியை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள்

வாரணாசி, உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வாரணாசி மாவட்டத்தில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது.

இங்கு, ஹிந்து கடவுளின் சிலை இருப்பதாகவும், அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தக் கோரியும், ஹிந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இங்கு ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, ஞானவாபி வளாகத்தில், தொழுகைக்கு முன் கைகளை கழுவ சிறிய தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இது, ‘வஜுகானா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த தொட்டியை சுத்தம் செய்ய அனுமதி தரும்படி, உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தில் உள்ள வஜுகானா, வாரணாசி கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் மேற்பார்வையில் நேற்று சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, ஹிந்து, முஸ்லிம் தரப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

காலை 9:15 மணிக்கு துவங்கிய துாய்மைப் பணி 11:45 மணிக்கு முடிந்தது. இந்தப் பணியில், நகராட்சி துாய்மைப் பணியாளர்கள், மீன்வளத் துறை, தீயணைப்புத் துறை ஊழியர்கள் என 26 பேர் ஈடுபட்டனர். சுத்தம் செய்யப்பட்ட பின், வஜுகானா பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.