புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014 ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. தனுர்ஜெய் சித்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பிறகு. 2019 சட்டமன்ற தேர்தலில் பிரேமானந்த நாயக்கை எதிர்த்து டெல்கோய் தொகுதியில் போட்டியிட்டு இந்த முறையும் தோல்வியடைந்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய தனுர்ஜெய் சித்து, ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். […]
