புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் முதல் ஆளாக வேட்பாளரை நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், நேற்று விடிய விடிய வேட்பாளர் தேர்வு தொடர்பாக பா.ஜ.க தலைமை ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய வேட்பாளர்களின் பட்டியல்:
- பிரதமர் மோடி- வாரணாசி
- உள்துறை அமைச்சர் அமித்ஷா: காந்தி நகர்
- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்:லக்னோ
- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் – ஜம்மு காஷ்மீரின் உதம்பூர்
- பர்ஷோத்தம் ரூபாலா – குஜராத்தின் ராஜ்கோட்
- பிப்லப் தேப் குமார் – திரிபுரா மேற்கு
- ஹேமமாலினி – உத்தரப் பிரதேசத்தின் மதுரா
- ஸ்மிரிதி இரானி – அமேதி
- சாத்வி நிரஞ்சன் ஜோதி – பதேபூர்
- ஜகதாம்பிகா பால் – தொமரியாகஞ்ச்
- அர்ஜூன் முண்டா – ஜார்க்கண்ட்டின் குண்டி (தனி)
- டாக்டர் அப்துல் சலாம் – கேரளாவின் மலப்புரம்
- எம்.டி.ரமேஷ் – கோழிக்கோடு
- அஷ்வினி – காசர்கோடு
- ஜோதிராதித்ய சிந்தியா – மத்தியப் பிரதேசத்தின் குணா
- சிவராஜ் சிங் சவுகான் – விதிஷா
- அர்ஜூன் ராம் மேக்வால் – ராஜஸ்தானின் பிகானிர்(தனி)
- கஜேந்திர சிங் ஷெகாவத் – ஜோத்பூர்
- சபாநாயகர் ஓம் பிர்லா – கோடா
- துஷ்யந்த் சிங் – ஜலாவர் பரன்
- பண்டி சஞ்சய் குமார் – தெலங்கானாவின் கரிம்நகர்
- ஜி. கிஷன் ரெட்டி – செகந்தராபாத்
- மலையாள நடிகர் சுரேஷ் கோபி – திருச்சூர்
- கிருஷ்ணகுமார் – பாலக்காடு
- ஷோபா சுரேந்திரன் – ஆலப்புழா
- அனில் ஆண்டனி – பதனம்திட்டா
- வி.முரளிதரன் – அட்டிங்கல்
- ராஜிவ் சந்திரசேகர் – திருவனந்தபுரம்
Related Tags :