இந்த வாரத்தின் டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்…
இறுதிக்கட்ட பணியில் ‘வேட்டையன்’!
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்பதை படக்குழுவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நடிகை அபிராமி வேட்டையன் திரைப்படத்தின் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது துஷாரா விஜயனும், ரித்திகா சிங்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படம், கூறியப்படி அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸை நெருங்கும் ‘கோட்’!
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. தற்போது சமூக வலைதளங்களில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச், டிரெய்லர் குறித்தான பேச்சுகள்தான் நிரம்பியிருக்கின்றன. இதில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட விஜய்யின் லுக்குடன் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம் 2004-ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தியது என்கிறார்கள்.

இத்திரைப்படம் எபிக், ஐமேக்ஸ் ஆகிய ஸ்கிரீன்களிலும் வெளியாகும் என்பதை ஸ்பெஷல் போஸ்டர்களோடு படக்குழு அறிவித்திருக்கிறது. வரும் நாட்களில் இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு பஞ்சமிருக்காது என்றும் கூறி வருகிறார்கள்.
பவன் கல்யாணுடன் முதல் முறையாக இணையும் பாலிவுட் நட்சத்திரம்!
ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகு படு பிஸியாக இருந்து வருகிறார் பவன் கல்யாண். இவர் நடிக்கும் ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா சூழல், பவன் கல்யாணின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் இத்திரைப்படம் தாமதமானது. இத்திரைப்படத்தை இயக்குநர் கிரிஸ் ஜகர்லமுடி இயக்குகிறார் என்பதை முன்பு அறிவித்திருந்தனர். அதன் பிறகு இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகனான ஜோதி கிருஷ்ணாவும் இப்படத்தின் டைரக்ஷன் பணிகளை மேற்கொள்வார் என அறிவித்தனர். தற்போது இந்த பிரமாண்ட ப்ராஜெக்ட்டில் பாலிவுட் நடிகரான அனுபம் கெரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இணைந்திருக்கிறார்.
.jpg)
ஆர்யாவின் அடுத்த தொடக்கம்!
ஆர்யா நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ரிலிஸுக்குத் தயாராகி வருகிறது. இதையும் தாண்டி பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். நடிப்பைத் தாண்டி சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இவர் தயாரிக்கிறார். தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்த ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தை இயக்கிய ஜியேன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
இரண்டாம் பாகத்தை கையில் எடுக்கும் ‘ஹாட் ஸ்பாட்’!
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு ஆயத்தமாகியிருக்கிறது படக்குழு. விக்னேஷ் கார்த்திக் சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை பிரிகிடாவுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது அவருடைய அடுத்த திரைப்படத்திற்கான புரொமோஷன் யுக்தி எனப் பலரும் கமெண்ட்டடித்தனர். பலரும் கணித்ததைப் போல அவருடைய அடுத்த திரைப்படம் குறித்தான மறைமுகமான அறிவிப்புதான் அந்த புகைப்படம்.
Aarambikalaama!!
Let’s double up the Sambavam. @VVStudioz takes vera level pleasure to present this CONTROVERSIAL KAAVIYAM #HotSpot2Much#2much_ah_povoma@TheVishnuVishal @vikikarthick88 @KJB_Talkies @KJB_iambala #Sevenwarrior @DuraiKv@Pro_Velu @decoffl#VishnuVishal #VV pic.twitter.com/0iZpQNZzZ3
— Vishnu Vishal Studioz (@VVStudioz) August 9, 2024
அடுத்தாக விக்னேஷ் கார்த்திக் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை நடிகர் விஷ்ணு விஷால் வழங்குகிறார். இத்திரைப்படத்திற்காக விஷ்ணு விஷால் நடித்திருக்கும் முன்னோட்ட வீடியோவும் வெளியாகியிருக்கிறது.