CSK vs DC : 'தோனிக்கென்ன தோனி இன்னும் நல்லாதான ஆடுறாரு!' – சப்போர்ட் செய்யும் ஃப்ளெம்மிங்

‘சென்னை அணி தோல்வி!’

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் சென்னை அணியை டெல்லி அணி 15 ஆண்டுகள் கழித்து வீழ்த்தியிருக்கிறது. இந்த சீசனில் சென்னை அணியின் ஹாட்ரிக் தோல்வி இது. இந்தத் தோல்வியை பற்றி சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

Flemming
Flemming

‘ஃப்ளெம்மிங் பத்திரிகையாளர் சந்திப்பு!’

அவர் பேசியிருப்பதாவது, ”எங்களுக்கு இந்த பேட்டிங் ஆர்டரின் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. டாப் ஆர்டரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காகத்தான் கான்வேயை லெவனுக்குள் அழைத்து வந்தோம். ஆனாலும் நாங்கள் சிரமப்பட்டோம். திரிபாதி நல்ல ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றுதான் காம்பீனேஷனை மாற்றினோம். ஆனால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு குறிப்பிட்ட டார்கெட்டுக்கு மேல் எங்களால் எட்ட முடியவில்லை என்பது பிரச்சனைதான்.

பௌலர்களை வைத்து எதிரணியை ஏதுவான டார்கெட்டுக்குள் கட்டுப்படுத்தவே நினைக்கிறோம். அதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. டாப் 4 இல் ஒன்றிரண்டு வீரர்கள் நல்ல ஃபார்மிலிருந்து அடிக்கும் போது பின்னால் சரியான வீரர்களை சரியான இடத்தில் இறக்க முடியும். அதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை.’ என்றவரிடம் பத்திரிகையாளர்கள் மேலும் சில கேள்விகளை அடுக்கினர்.

Dhoni
Dhoni

‘தோனி நல்லாதான ஆடுறாரு!’

தோனியின் ஓய்வு பற்றி நிறைய அனுமானங்கள் இன்று பேசப்பட்டது. அவரின் பெற்றோரும் கூட இன்று போட்டியை காண வந்திருந்தார்கள். அதைப்பற்றி சொல்லுங்களேன்.

‘தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அவருடன் பணி செய்வதை அனுபவித்து மகிழ்கிறேன். அவர் இன்னும் வலுவாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஓய்வு பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்.

‘அஷ்வின் சேனலை பற்றி தெரியாது!’

Ashwin
Ashwin

அஷ்வினின் யூடியூப் சேனலில் ஒரு விருந்தினர் உங்களின் சிஎஸ்கே வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்? அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

‘I Have No Idea’ – நான் அந்த சேனலை ஃபாலோ செய்வதில்லை.

சென்னை அணியின் தோல்விக்கு காரணமென நீங்கள் நினைக்கும் விஷயங்களை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.