சிதம்பரம்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், போகும் வழியான கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, இன்று காலை சிதம்பரத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை தொடக்கி வைத்தார். அதன் பின்னா் சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் உள்ள புதிய […]
