திருமணம் தொடர்பான வழக்குகளில் கணவன் – மனைவிக்கு இடையில் உரையாடல்கள் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும் ஆதாரமாக ஏற்கலாம்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ‘‘கணவன் – மனை​விக்​குள் நடை​பெற்ற உரை​யாடல்​களை, ரகசி​ய​மாக பதிவு செய்​திருந்​தால் அவற்றை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்’’ என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பஞ்​சாப் மாநிலம் பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான ஒரு வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனைவி தன்னை சித்​ர​வதை செய்​வ​தாக கணவன் குற்​றம் சாட்​டி​னார். அதற்கு ஆதா​ர​மாக தொலைபேசி​யில் மனைவி பேசிய அனைத்​தை​யும் ரகசி​ய​மாக பதிவு செய்து அதை டிஸ்க்​கில் பதிவேற்​றம் செய்து சமர்ப்​பித்​தார். அந்த தொலைபேசி உரையாடல்​களை குடும்​பநல நீதி​மன்​றம் ஆதா​ர​மாக ஏற்​றுக் கொண்​டது.

இதை எதிர்த்து மனைவி தரப்​பில் பஞ்​சாப் – ஹரி​யானா உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. விசா​ரணை​யின் போது, ‘‘எனக்கு தெரி​யாமல் அல்​லது என்​னுடைய அனு​மதி இல்​லாமல் தொலைபேசி உரை​யாடல்​கள் ரகசி​ய​மாக பதிவு செய்யப்பட்​டுள்​ளன. இது என்​னுடைய அந்​தரங்​க​மான விஷ​யங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அடிப்​படை உரிமையை மீறு​வ​தாகும்’’ என்று மனைவி வாதாடி​னார்.

இந்த வாதத்தை ஏற்​றுக் கொண்ட உயர் நீதி​மன்​றம், கணவன் அளித்த தொலைபேசி உரை​யாடல் ஆதா​ரத்தை ஏற்க முடி​யாது என்று உத்​தர​விட்​டது. அத்​துடன், கணவன் – மனைவி இடையே நடை​பெறும் உரை​யாடல்​களை ரகசி​ய​மாகப் பதிவு செய்​வது தனியுரிமையை மீறு​வ​தாகும். அது சட்​டப்​பூர்​வ​மாக நியாயப்​படுத்​தப்​பட​வில்லை என்று தீர்ப்​பளித்​தது.

உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் கணவன் வழக்கு தொடர்ந்​தார். அந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்னா, சதீஷ் சந்​திர சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில் கூறிய​தாவது: கணவன் – மனைவி ஒரு​வரை ஒரு​வர் உளவு பார்ப்​பது திரு​மணம் வலு​வாக இல்லை என்​ப​தை​த்தான் காட்​டு​கிறது. எனவே, கணவன் மனை​விக்​குள் நடை​பெறும் உரை​யாடல்​களை ரகசி​ய​மாக பதிவு செய்திருந்​தால், திருமண வழக்​கு​களில் அதை ஆதா​ர​மாக பயன்​படுத்​தலாம்.

கணவன் – மனைவி இரு​வரும் உரை​யாடல்​களைப் பதிவு செய்​வது அவர்​களின் திரு​மணம் வலு​வாக இல்லை என்​ப​தற்​கான சான்றாகும், எனவே அதை நீதித்​துறை நடவடிக்​கை​களில் பயன்​படுத்​தலாம். இது​போன்ற உரை​யாடல்​களின் ரகசிய பதிவு​களை ஆதா​ர​மாக ஏற்​றுக் கொண்​டால் குடும்​பத்​தின் நல்​லிணக்​கம் கெடும். கணவன் – மனைவி உறவு பாதிக்​கும். உளவு பார்ப்​பதை ஊக்​கு​விப்​பது போலாகும் என்று கூறுகின்​றனர்.

அத்​தகைய வாதம் ஏற்​கத்​தக்​கது என்று நாங்​கள் நினைக்​க​வில்​லை. திரு​மணத்​துக்​குப் பிறகு கணவன் – மனைவி ஒரு​வரை ஒருவர் உளவு பார்க்​கும் அளவுக்கு வந்​துவிட்​டால், அதுவே அவர்​களுக்​குள் பெரிய விரிசல் ஏற்​பட்​டுள்​ளது என்​ப​தற்​கான அறிகுறி. எனவே, பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றம், தொலைபேசி உரை​யாடல் விவரங்​களை ஆதா​ர​மாக கொண்டு வழக்கை தொடர்ந்து வி​சா​ரிக்​கலாம்​. இவ்​வாறு உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ தீர்​ப்​பளித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.