2025 மாருதி சுசூகியின் பலேனோ காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகம் | Automobile Tamilan


2025 Maruti Suzuki Baleno

பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான மாருதி சுசூகி பலேனோவின் அனைத்து வேரியண்டுகளிலும் 6 ஏர்பேக்குகளை பெற்று விலை 0.5% வரை அதிகரிக்கப்பட்டு தற்பொழுது 6.73 லட்சம் முதல் ரூ. 9.97 வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

6 ஏர்பேக்குகளை தவிர வேறு எவ்விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 90 hp பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்ற நிலையில் மைலேஜ் 22.35 km/l (MT), 22.94 km/l(AMT) வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக பலேனோ சிஎன்ஜி எரிபொருள் வாகனத்தில் 77hp பவர் மற்றும் 98.5 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெட்ரோல் சிஎன்ஜி எஞ்சின் மைலேஜ் 30.61 km/kg ஆக உள்ளது.

2025 Maruti Suzuki Baleno price list

Baleno Variants Old Prices New Prices
Sigma ₹6,70,000 ₹6,73,350
Delta ₹7,54,000 ₹7,57,770
Delta AT ₹8,04,000 ₹8,08,020
Delta CNG ₹8,44,000 ₹8,48,220
Zeta ₹8,47,000 ₹8,51,235
Zeta AT ₹8,97,000 ₹9,01,485
Zeta CNG ₹9,37,000 ₹9,41,685
Alpha ₹9,42,000 ₹9,46,710
Alpha AT ₹9,92,000 ₹9,96,960

சமீபத்தில் இதன் ரீபேட்ஜிங் கிளான்ஸா மாடலும் 6 ஏர்பேக்குகளை பெற்றிருந்தது. குறிப்பாக, பாதுகாப்பில் முன்பாக BNCAP சோதனை செய்யப்பட்ட இரண்டு ஏர்பேக் உள்ள பலேனோ குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் 4 ஸ்டார் பெற்றுள்ளது. எனவே, தற்பொழுது 6 காற்றுப்பைகள் உள்ளதால் பாதுகாப்பு மிக சிறப்பானதாக அமைந்திருக்கும்.

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.